< Back
மாநில செய்திகள்
தவறி விழுந்து பள்ளி மாணவன் பலி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

தவறி விழுந்து பள்ளி மாணவன் பலி

தினத்தந்தி
|
29 Oct 2022 12:15 AM IST

பழனி அருகே ஓடும் வேனில் ஏறியபோது தவறி விழுந்து பள்ளி மாணவன் பலியாகினான்.ழனி அருகே ஓடும் வேனில் ஏறியபோது தவறி விழுந்து பள்ளி மாணவன் பலியாகினான்.

பழனி அடிவாரத்தை சேர்ந்த குமரேசன் மகன் ரமேஷ் (வயது 14). அடிவாரம் பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று முன்தினம் பழனி பாலாறு-பொருந்தலாறு அணை பகுதியில் நடந்த தனியார் நிறுவனத்தின் குறும்பட படப்பிடிப்பு நடந்தது. இதில் நடனமாடுவதற்கு ரமேஷ் தனது நண்பர்களுடன் சென்றான். அணை அருகே உள்ள பாலசமுத்திரம் சாலையில் ரமேஷ் தனது நண்பர்களுடன் நடந்து சென்றார்.

அப்போது அந்த வழியாக வந்த வேனில் ரமேஷ் ஏற முயன்றதாக கூறப்படுகிறது. இதில் எதிர்பாராதவிதமாக வேனில் இருந்து தவறி கீழே விழுந்ததில் ரமேசின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

ஆனால் வரும் வழியிலேயே ரமேஷ் பரிதாபமாக இறந்தான். இந்த விபத்து குறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்