< Back
மாநில செய்திகள்
சிமெண்டு காரைகள் பெயர்ந்து காணப்படும் சுகாதார நிலையம்
திருவாரூர்
மாநில செய்திகள்

சிமெண்டு காரைகள் பெயர்ந்து காணப்படும் சுகாதார நிலையம்

தினத்தந்தி
|
3 Aug 2022 11:31 PM IST

சிமெண்டு காரைகள் பெயர்ந்து காணப்படும் சுகாதார நிலையம்

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் அருகே சிமெண்டு காரைகள் பெயர்ந்து காணப்படும் சுகாதார நிலையத்தை அதிகாரிகள் விரைவில் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆரம்ப சுகாதார நிலையம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள, பொதக்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதக்குடி, அதங்குடி, வெள்ளக்குடி, ஆய்குடி, சேகரை, விழல்கோட்டகம், வாழச்சேரி, கிளியனூர், கோரையாறு, கீழவாளச்சேரி, மேலவாளச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக பெண்கள் பிரசவம் மற்றும் பல்வேறு பரிசோதனைகளுக்கு இந்த சுகாதார நிலையத்துக்கு வந்து செல்கிறார்கள்.

விரைவில் சீரமைக்க கோரிக்கை

இந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தின் உள் பகுதியில், மேற்கூரையில் சிறு சிறு விரிசல்கள் ஏற்பட்டு உள்ளது. மேலும், விரிசல்கள் ஏற்பட்ட இடத்தில், சிமெண்டு காரைகள் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரியும் அளவிற்கு சேதமடைந்து உள்ளது.

இதனால் இந்த சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் புற நோயாளிகள் அச்சத்துடன் வந்து செல்கிறார்கள். எனவே ஆரம்ப சுகாதார நிலையம் முழுமையாக சேதம் அடைவதற்கு முன்பு சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்