< Back
மாநில செய்திகள்
4 வயது குழந்தையை கொலை செய்து விடுவதாக மிரட்டிய ரவுடி கைது
பெரம்பலூர்
மாநில செய்திகள்

4 வயது குழந்தையை கொலை செய்து விடுவதாக மிரட்டிய ரவுடி கைது

தினத்தந்தி
|
7 Oct 2023 11:08 PM IST

மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழ வலியுறுத்தி தனது 4 வயது குழந்தையை கொலை செய்து விடுவதாக கத்தியை காட்டி மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரவுடி

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள உசேன் நகரம் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் சந்தோஷ்குமார்(வயது 33). ரவுடியான இவர் மீது குன்னம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரது மனைவி அரியலூர் மாவட்டம் வெற்றியூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் மகள் ராதிகா(26). இவர்களுக்கு பவித்ரா(6) என்ற மகளும், விஷ்வா(4) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களாக பிரிந்து சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார். குழந்தைகள் இருவரும் சந்தோஷ்குமார் பாதுகாப்பில் வளர்ந்து வருகின்றனர்.

கொலை மிரட்டல்

இந்நிலையில் கடந்த 5-ந் தேதி தனது மனைவி ராதிகாவை தன்னுடன் சேர்ந்து வாழ வீட்டிற்கு அழைப்பதற்காக வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது கத்தியை காட்டி தனது மகன் விஷ்வாவை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். மேலும் தனது மனைவியை வீட்டிற்கு வர கூறும் 2 வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இதுகுறித்து ராதிகா குன்னம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பெரம்பலூர் சட்டம் சார் நன்னடத்தை அலுவலர் கோபிநாத் மேல உசேன் நகரத்திற்கு சென்று 2 குழந்தைகளையும் அழைத்து வந்து குன்னம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். மேலும் குன்னம் போலீசார் சந்தோஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்