< Back
மாநில செய்திகள்
சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு மிரட்டல் விடுத்த ரவுடி - என்னை கைது செய்து பார், வெடிகுண்டு வீசுவேன்
சென்னை
மாநில செய்திகள்

சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு மிரட்டல் விடுத்த ரவுடி - "என்னை கைது செய்து பார், வெடிகுண்டு வீசுவேன்"

தினத்தந்தி
|
4 Aug 2023 3:49 PM IST

சென்னை சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்று அங்கு காவலுக்கு நின்ற பெண் போலீசிடம், “என்னை கைது செய்து பார், வெடிகுண்டு வீசுவேன்” என்று போதையில் மிரட்டிய ரவுடி சிறைக்கு அனுப்பப்பட்டார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்று அங்கு காவலுக்கு நின்ற பெண் போலீசிடம், "என்னை கைது செய்து பார், வெடிகுண்டு வீசுவேன்" என்று போதையில் மிரட்டிய ரவுடி சிறைக்கு அனுப்பப்பட்டார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையம் நேற்று முன்தினம் நள்ளிரவு பெரும் பரபரப்பானது. அங்கு வந்த தர்கா மோகன் (வயது 61) என்பவர், தான் பெரிய ரவுடி என்றும், தன்னை தெரியாத ஆள் இல்லை என்றும், முடிந்தால் என்னை கைது செய்து, கை, கால்களை உடைத்து ஜெயிலுக்கு அனுப்புங்கள் என்றும் சவால் விட்டு பேசினார்.

அப்போது அங்கு போலீஸ் நிலைய காவல் பணியில் பெண் போலீஸ் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் நின்றார். அவரிடமும் தர்கா மோகன் அடாவடியாக பேசினார். அவர் போதையில் இருந்ததாக தெரிகிறது.

பின்னர் தர்கா மோகன், கையில் வைத்திருந்த பையை காட்டி, அதற்குள் வெடிகுண்டு இருப்பதாக கூறினார். தன்னை கைது செய்தால் வீசுவதற்குதான் அந்த வெடிகுண்டு, என்றும் மிரட்டல் விடுத்தார். பின்னர் அவர் அங்கிருந்து சென்று விட்டார். இது குறித்து பெண் போலீஸ், உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்.

உடனடியாக விரைந்து செயல்பட்ட போலீசார், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு தர்கா மோகனை கைது செய்தனர். அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தர்கா மோகனை தேடி வந்ததாகவும், அவராகவே அடாவடியில் ஈடுபட்டு மாட்டிக்கொண்டதாகவும், போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்