< Back
மாநில செய்திகள்
ரவுண்டானா அமைக்க வேண்டும்
திருவாரூர்
மாநில செய்திகள்

ரவுண்டானா அமைக்க வேண்டும்

தினத்தந்தி
|
3 July 2023 12:15 AM IST

நீடாமங்கலம் கோரையாறுபாலம் அருகே ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரிவு சாலை வழியாக வாகனங்கள்

நீடாமங்கலம் கோரையாறுபாலம் அருகில் தஞ்சாவூர், மன்னார்குடி செல்லும் பிரிவு சாலைகள் உள்ளன. இந்த பிரிவுசாலை வழியாக தஞ்சாவூரிலிருந்து நீடாமங்கலம் வழியாக திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, காரைக்கால் வரை செல்லும் பஸ்கள், லாரிகள், கார்கள், வேன்கள், இதர கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.

இதேபோல் பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி முதலான ஊர்களிலிருந்து நீடாமங்கலம் வழியாக கும்பகோணம், வேலூர், காஞ்சீபுரம், சென்னை, திருப்பதி ஆகிய ஊர்களுக்கு பஸ்கள்,

லாரிகள், கார்கள், வேன்கள் ஆகிய வாகனங்கள் சென்று வருகின்றன.

ரவுண்டானா அமைக்க வேண்டும்

தஞ்சாவூர், மன்னார்குடி ஆகிய ஊர்களிலிருந்து சென்றுவரும் அனைத்து வாகனங்களும் நீடாமங்கலம் கோரையாறு பாலம் பிரிவுசாலையில் வந்து செல்கின்றன. வாகனங்கள் அதிவேகமாக வரும் போது பிரிவு சாலையில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீடாமங்கலம் கோரையாறுபாலம் அருகே பிரிவுசாலை பகுதியில் ரவுண்டானா அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்