திருவண்ணாமலை
வட்ட அளவிலான செஸ் போட்டி
|வாணாபுரத்தில் வட்ட அளவிலான செஸ் போட்டி
வாணாபுரம்
தண்டராம்பட்டு வட்ட அளவிலான செஸ் போட்டி வாணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று தொடங்கியது. தலைமை ஆசிரியர் நந்தகுமார் தலைமை தாங்கினார்.
வாணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மாதேஸ்வரன், ஒன்றிய செயலாளர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவர் பரிமளா கலையரசன் கலந்துகொண்டு செஸ் போட்டியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மாணவர்களின் கல்வியில் மேம்படுத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இதில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பலராமன், வாணாபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கஸ்தூரி, எடக்கல் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிச்சைரத்தினம், தென்கரும்பலூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பேபி கிளாரா, உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயசீலன், கிருஷ்ணமூர்த்தி, ராதிகா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஏழுமலை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
செஸ் போட்டியில் தண்டராம்பட்டை வட்ட அளவிலான 25 பள்ளிகளைச் சேர்ந்த 140 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது இதில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.