< Back
மாநில செய்திகள்
சிறுவனை கடித்து குதறிய ராட்வீலர் நாய்.. சென்னையில் மீண்டும் சம்பவம்
மாநில செய்திகள்

சிறுவனை கடித்து குதறிய 'ராட்வீலர்' நாய்.. சென்னையில் மீண்டும் சம்பவம்

தினத்தந்தி
|
22 Jun 2024 6:39 AM IST

நாய் கடித்து குதறியதில் சிறுவனின் தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது.

பூந்தமல்லி,

சென்னை மாங்காடு அடுத்த பொழுமணிவாக்கம் சார்லஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ். இவரது மனைவி எலிசபெத். இவர்களுக்கு துஜேஷ் (வயது 11) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று வீட்டின் வெளியே துஜேஷ், தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தான். அப்போது துஜேஷ் வீட்டின் எதிரே வசிக்கும் கார்த்திக் என்பவர் தனது வீட்டில் வளர்க்கும் 'ராட்வீலர்' நாயை நடைபயிற்சிக்கு அழைத்து சென்றார்.

அப்போது அந்த நாய் திடீரென, அங்கு விளையாடி கொண்டிருந்த துஜேசை கடித்து குதறியது. இதில் துஜேசின் தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவனை சிகிச்சைக்காக பூந்தமல்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இது குறித்து சிறுவனின் பெற்றோர் நாயின் உரிமையாளரான கார்த்திக் மீது மாங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்