< Back
மாநில செய்திகள்
கிணற்றில் அழுகிய நிலையில் பிணம்
விருதுநகர்
மாநில செய்திகள்

கிணற்றில் அழுகிய நிலையில் பிணம்

தினத்தந்தி
|
29 July 2023 1:17 AM IST

கிணற்றில் அழுகிய நிலையில் பிணம் மீட்கப்பட்டது.

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே கல்குறிச்சி நான்கு வழிச்சாலை பகுதியில் பாழடைந்த கிணற்றுக்குள் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியில் ஆடு மேய்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மல்லாங்கிணறு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது கிணற்றுக்குள் உடல் அழுகிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த காரியாபட்டி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கிணற்றுக்குள் தனி, தனியாக கிடந்த உடல் பாகங்களை மீட்டனர். அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல் ஆணா, பெண்ணா என தெரியவில்லை. கொலையா? அல்லது தற்கொலையா? என பல்வேறு கோணங்களில் மல்லாங்கிணறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்