< Back
மாநில செய்திகள்
அம்பத்தூரில் பெண்ணிடம் நகை பறித்த காதல் ஜோடி
சென்னை
மாநில செய்திகள்

அம்பத்தூரில் பெண்ணிடம் நகை பறித்த காதல் ஜோடி

தினத்தந்தி
|
22 Sept 2023 6:24 PM IST

அம்பத்தூரில் பெண்ணிடம் நகை பறித்த காதல் ஜோடியை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் கஸ்தூரி அம்மாள் (வயது 54). இவர், அம்பத்தூரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு பஸ்சில் வந்தார். பின்னர் அம்பத்தூர் சிவனானந்தன் நகர் சாலையில் நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு காதல் ஜோடி திடீரென கஸ்தூரி அம்மாள் கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை பறித்துவிட்டு தப்பிச்செல்ல முயன்றனர்.

அப்போது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். உடனே அருகில் இருந்த பொதுமக்கள், காதல் ஜோடியை மடக்கி பிடித்து அம்பத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். நகை பறிப்பில் ஈடுபட்ட காதல் ஜோடியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்