< Back
மாநில செய்திகள்
கோவையில் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ரவுடி... பரபரப்பு சம்பவம்
மாநில செய்திகள்

கோவையில் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ரவுடி... பரபரப்பு சம்பவம்

தினத்தந்தி
|
7 March 2023 8:18 AM IST

கோவை காட்டுமடம் பகுதியில் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ரவுடியால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை,

கோவையில் ஆயுத வழக்கில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

துப்பாக்கிச்சூடு நடத்திய கைதி சஞ்செய் ராஜாவை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்ய சென்ற போது அதை எடுத்து போலீசாரை சஞ்சய் ராஜ் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

கோவை காட்டு மடம் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தற்காப்புக்காக உதவி ஆய்வாளர் சந்திரசேகர் சுட்டதில் முட்டில் காயம் அடைந்த சஞ்சய் ராஜா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்