< Back
மாநில செய்திகள்
லாரி மோதி சாலையில் கவிழ்ந்த நெல் அறுவடை எந்திரம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

லாரி மோதி சாலையில் கவிழ்ந்த நெல் அறுவடை எந்திரம்

தினத்தந்தி
|
11 April 2023 1:01 AM IST

லாரி மோதியதில் சாலையில் நெல் அறுவடை எந்திரம் கவிழ்ந்தது.

ஆதனக்கோட்டை:

நெல் அறுவடை எந்திரம்-லாரி கவிழ்ந்தன

பெரம்பலூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரெங்கசாமி(வயது 42). இவர் கந்தர்வகோட்டை அருகே கதிர் அறுவடை செய்யும் எந்திரம் மூலம் அறுவடை பணியில் ஈடுபட்டுவிட்டு, கந்தர்வகோட்டையில் இருந்து பெருங்களூர் நோக்கி தஞ்சை-புதுகை தேசிய நெடுஞ்சாலையில் வளவம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது புதுக்கோட்டையில் இருந்து ஜல்லிக்கற்கள் ஏற்றிக்கொண்டு மன்னார்குடி நோக்கி வந்த டிப்பர் லாரி, நெல் அறுவடை எந்திரம் மீது மோதியது. இதில் நெல் அறுவடை எந்திரம் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையின் நடுவே கவிழ்ந்தது. டிப்பர் லாரியும் சாலை அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

போக்குவரத்து பாதிப்பு

இதில் டிப்பர் லாரியை ஓட்டி வந்த திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா, சிறுமங்களம் கக்கன் தெருவை சேர்ந்த துரைராஜின் மகன் பிரகாஷ்(35) மற்றும் நெல் அறுவடை எந்திர ஓட்டுனரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்து வந்த ஆதனக்கோட்டை போலீசார், நெல் அறுவடை எந்திரத்தை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆதனக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்