< Back
மாநில செய்திகள்
தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ரெயிலில் அடிபட்டு பலி
சென்னை
மாநில செய்திகள்

தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ரெயிலில் அடிபட்டு பலி

தினத்தந்தி
|
14 March 2023 12:31 PM IST

ஆவடி ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ரெயிலில் அடிபட்டு பலியானார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அசமந்தூர் மதுராபுரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜரத்தினம் (வயது 76). ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான இவர், ஆவடியில் உள்ள தனது தம்பி மகன் வீட்டில் தங்கி இருந்தார்.

நேற்று காலை அரக்கோணம் செல்வதற்காக ஆவடி ரெயில் நிலையத்துக்கு வந்தார். அப்போது தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது சென்னை நோக்கி வந்த சரக்கு ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்