< Back
மாநில செய்திகள்
திருவாலங்காடு அருகே ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் மர்ம சாவு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவாலங்காடு அருகே ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் மர்ம சாவு

தினத்தந்தி
|
25 July 2023 3:03 PM IST

திருவாலங்காடு அருகே ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரெயில்வே ஊழியர்

திருவாலங்காடு ஒன்றியம் தொழுதாவூர் ஊராட்சி மருதவல்லிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராகவன் (வயது 61). இவர் ரெயில்வே துறையில் பணிபுரிந்த நிலையில் கடந்தாண்டு ஓய்வு பெற்றார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ராகவன் தினமும் குடித்து விட்டு வீட்டில் குடும்பத்தாரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல ராகவன் குடிபோதையில் தனது இளைய மகன் ஏழுமலை (37) உடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது ராகவன் ஆத்திரமடைந்து வீட்டிலிருந்த கத்தியால் மகன் ஏழுமலையை வயிற்றில் குத்தினார். இதனால் ஆத்திரமடைந்த மகன் ஏழுமலை தந்தை ராகவனை கட்டையில் தாக்கியதாக கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இதில் ராகவன் நெற்றியில் காயமடைந்தார். கத்தியால் குத்தியதில் வயிற்றில் காயமடைந்த ஏழுமலை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்று சென்றார். ஆனால் ராகவன் ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் காயத்துடன் வீட்டில் தூங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இரவு 10 மணி அளவில் அவர் இறந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாலங்காடு இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார் நேற்று காலை ராகவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மகன் ஏழுமலை தாக்கியதில் ராகவன் இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்