< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பைக்கில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்கும் ஓய்வுப்பெற்ற காவலர்
|9 Oct 2022 3:33 PM IST
திருத்தணியில் ஓய்வுப்பெற்ற காவலர் இருசக்கர வாகனத்தில் மதுபானத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக குணசேகரன் என்பவர் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
இவர் இருசக்கர வாகனத்தில் கள்ளத்தனமாக மதுபானங்களை பதுக்கி வைத்துக் கொண்டு திருத்தணி நெடுஞ்சாலை மற்றும் நகரின் முக்கிய இடங்களில் மதுபானம் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
திருத்தணி காவல் நிலையத்தில் காவலராக இருந்து ஓய்வு பெற்றதால், இவர் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் கண்டும் காணாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.