< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியர் கார் மோதி சாவு
|4 Sept 2023 7:16 PM IST
கும்மிடிப்பூண்டி அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியர் கார் மோதி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சோழவரம் அடுத்த இருளிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயவேலு (வயது 60). இவர் பொதுப்பணித்துறையின் ஊழியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகில் உள்ள பஞ்செட்டி பகுதியில் ஒரு திருமணத்திற்காக வந்திருந்த ஜெயவேலு, நேற்று மாலை அப்பகுதியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது சென்னையிலிருந்து ஆந்திரா நோக்கிச் சென்ற கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஜெயவேலு, சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.