< Back
மாநில செய்திகள்
2 குடியிருப்புகளுக்கு இடையே ஆக்கிரமித்து கட்டப்பட்ட தடுப்பு சுவர்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

2 குடியிருப்புகளுக்கு இடையே ஆக்கிரமித்து கட்டப்பட்ட தடுப்பு சுவர்

தினத்தந்தி
|
26 Nov 2022 6:45 PM GMT

2 குடியிருப்புகளுக்கு இடையே ஆக்கிரமித்து கட்டப்பட்ட தடுப்பு சுவர்

நாகையில் 2 குடியிருப்புகளுக்கு இடையே ஆக்கிரமித்து கட்டப்பட்ட தடுப்பு சுவர் போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது.

தடுப்பு சுவர்

நாகையில் மேட்டுப்பங்களா தெரு உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இதையொட்டி மறைமலைநகர் பகுதியிலும் அதிக அளவிலான குடியிருப்புகள் உள்ளன. இந்த 2 குடியிருப்புகளுக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. இந்த தடுப்பு சுவர் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக மறைமலைநகரை சேர்ந்த ஒருவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நடவடிக்கை எடுக்க நாகை நகராட்சி நிர்வாகத்திற்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக 2 குடியிருப்புகளுக்கும் இடையே உள்ள தடுப்பு சுவரை இடிப்பதற்கு நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, உதவி கலெக்டர் பானோத்ம்ருகேந்தர்லால் ஆகியோர் தலைமையில் நகராட்சி நகரமைப்பு அலுவலர்கள் முருகானந்தம், செல்வராஜ் ஆகியோர் நேற்று அதிகாலை மேட்டுப்பங்களா தெருவுக்கு சென்றனர். அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் பொக்லின் எந்திரங்கள் மூலம் தடுப்பு சுவரை இடித்தனர்.

வாக்குவாதம்

இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பங்களா தெரு குடியிருப்பை சேர்ந்தவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். எந்தவித முன் அறிவிப்பும் இன்றி எப்படி சுவரை இடிக்கிறீர்கள்? என அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டனர். அதற்கு கோர்ட்டு உத்தரவின் பேரில் சுவர் இடிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது 2 தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதையடுத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தடுப்பு சுவரை இடித்து விட்டு நகராட்சி பணியாளர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்