< Back
மாநில செய்திகள்
லெப்பைக்குடிகாடு பகுதியில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க வேண்டுகோள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

லெப்பைக்குடிகாடு பகுதியில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க வேண்டுகோள்

தினத்தந்தி
|
23 Jan 2023 12:00 AM IST

லெப்பைக்குடிகாடு பகுதியில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லெப்பைக்குடிகாடு கிளை சார்பில் தெருமுனை கூட்டம், கிளை தலைவர் செய்யது அலி தலைமையில் நடந்தது. இதில் சமூக பாதுகாப்பு மற்றும் கல்வியின் அவசியம் குறித்து அமைப்பின் மாநில செயலாளர் அல் அமின் பேசினார். லெப்பைக்குடிகாடு பகுதியில் அதிகரித்து வரும் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படும். இதேபோல் லெப்பைக்குடிகாடு கிழக்கு பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அருகே நடைபெற்று வரும் சட்ட விரோதமாக மது விற்பனையை முற்றிலும் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்