< Back
மாநில செய்திகள்
வட்டார அளவிலான கலை திருவிழா
பெரம்பலூர்
மாநில செய்திகள்

வட்டார அளவிலான கலை திருவிழா

தினத்தந்தி
|
21 Oct 2023 2:25 AM IST

வட்டார அளவிலான கலை திருவிழா நடந்தது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி அளவில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் முதல் இடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு வட்டார அளவில் கலை திருவிழா போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பள்ளி அளவில் 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கலை திருவிழா போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய வட்டாரங்கள் அளவில் போட்டிகள் நடைபெற்றன. அவர்களுக்கு ஓவியம், கட்டுரை, நடனம், நாடகம், இசை, களிமண்ணில் சிலை செய்தல் உள்ளிட்ட 9 விதமான கலை போட்டிகள் நடைபெற்றது. மாணவ-மாணவிகள் இந்த கலை திருவிழா போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

பள்ளி அளவில் கலை திருவிழா போட்டிகளில் 11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கலை திருவிழா போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு இன்று (சனிக்கிழமை) மேற்கண்ட வட்டார அளவில் போட்டிகள் நடைபெறுகிறது. வட்டார அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வருகிற 26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை மாவட்ட அளவிலும், அதில் முதலிடம் பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 21-ந்தேதி முதல் 24-ந்தேதி வரையும் மாநில அளவிலான போட்டிகள் நடைபெறவுள்ளது. போட்டியில் வெற்றி பெறும் மாணவருக்கு கலையரசன் விருதும், மாணவிக்கு கலையரசி விருதும் வழங்கப்பட உள்ளது. மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தர வரிசையில் முதன்மைப்பெறும் மாணவ-மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படவுள்ளனர்.

மேலும் செய்திகள்