< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
இந்துமதத்தைப் பின்பற்றுபவர்களை இழிவுபடுத்தும் விதமாக ஆ.ராசா பேசியிருப்பது கண்டனத்திற்குரியது - டிடிவி தினகரன்
|17 Sept 2022 2:30 PM IST
இந்துமதத்தைப் பின்பற்றுபவர்களை இழிவுபடுத்தும் விதமாக ஆ.ராசா பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை,
இந்துமதத்தைப் பின்பற்றுபவர்களை இழிவுபடுத்தும் விதமாக ஆ.ராசா பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
"இந்துமதத்தைப் பின்பற்றுபவர்களை இழிவுபடுத்தும் விதமாக தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மிகவும் கீழ்த்தரமாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. மத உணர்வுகளைத் தூண்டும் இத்தகைய பேச்சுகளை அனுமதிப்பது சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்.
பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நாவடக்கம் தேவை. தி.மு.க அரசின் தோல்விகளைத் திசை திருப்புவதற்காகவே ராசா போன்றவர்களை பேசவிட்டு, ஸ்டாலின் வேடிக்கைப் பார்க்கிறாரோ? என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.