< Back
மாநில செய்திகள்
சூரியனை சுற்றி வானவில் நிறத்தில் ஒளிவட்டம்
தர்மபுரி
மாநில செய்திகள்

சூரியனை சுற்றி வானவில் நிறத்தில் ஒளிவட்டம்

தினத்தந்தி
|
27 Sept 2023 1:00 AM IST

சூரியனை சுற்றி வானவில் போன்று ஒளிவட்டம் தோன்றிய அதிசயம் நிகழ்ந்தது.

பென்னாகரம்:-

சூரியனை சுற்றி வானவில் நிறத்தில் பல வண்ண ஒளிவட்டம் தோன்றியதை தர்மபுரி மாவட்டத்தின் பென்னாகரம் பகுதி மக்கள் பார்த்து வியந்தனர். அதாவது வானம் மேகமின்றி தெளிவாக உள்ள நிலையில், ஒளி வட்டம் வானவில் போல பல வண்ணத்துடன் காட்சி அளித்தது. பொதுமக்கள் இந்த ஒளிவட்டத்தை பார்த்து ஆச்சர்யமடைந்தனர். வெளிப்புறம் இளம்பழுப்பு நிறம், உட்புறம் சிவப்பு மற்றும் பிற வண்ணக் கலவையுடன் ரசிக்கும்படி இருந்த இந்த ஒளிவட்டம் மதியம் 12.30 முதல் 1.30 வரை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதனை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்போனில் படம் எடுத்துக் கொண்டனர்.

மேலும் செய்திகள்