< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிளில் கடந்து செல்ல முயன்றபோது ரெயிலில் அடிப்பட்டு ரெயில்வே ஊழியர் பலி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிளில் கடந்து செல்ல முயன்றபோது ரெயிலில் அடிப்பட்டு ரெயில்வே ஊழியர் பலி

தினத்தந்தி
|
21 Jun 2022 2:36 PM IST

மோட்டார் சைக்கிளில் கடந்து செல்ல முயன்றபோது ரெயிலில் அடிப்பட்டு ரெயில்வே ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அடுத்த அரிசந்திராபுரத்தில் வசித்து வந்தவர் வேலாயுதம் (வயது 38). ரெயில்வே ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (38) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருவாலங்காடு ரெயில் நிலையம் அடுத்த அரிசந்திராபுரம் ரெயில்வே கேட்டை கடக்க முயன்றார். அப்போது அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரெயில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் வேலாயுதம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த பாலகிருஷ்ணன் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்