< Back
மாநில செய்திகள்
கண்ணில் கண்டவரை எல்லாம் வெறிப்பிடித்து கடித்த நாய் - சிறுவர்கள் உட்பட 20 பேர் காயம்
மாநில செய்திகள்

கண்ணில் கண்டவரை எல்லாம் வெறிப்பிடித்து கடித்த நாய் - சிறுவர்கள் உட்பட 20 பேர் காயம்

தினத்தந்தி
|
28 Oct 2022 7:59 PM IST

ஆண்டிப்பட்டி அருகே வெறிநாய் கடித்ததில், சிறுவர்கள் உட்பட 20 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே வெறிநாய் கடித்ததில், சிறுவர்கள் உட்பட 20 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டம், கொண்டமநாயக்கன்பட்டி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று திடீரென வெறிபிடித்து அந்த வழியாக செல்வோரை கடிக்க தொடங்கியது. தெருக்களில் அங்குமிங்கும் ஓடிய அந்த நாய் கண்ணில் கண்டவரை எல்லாம் கடிக்க தொடங்கியது.

இதில் 6 சிறுவர்கள் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் ரத்தகாயங்களுடன் ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்