< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
ஓடையில் மலைப்பாம்பு பிடிபட்டது
|22 Oct 2023 3:29 AM IST
ஓடையில் மலைப்பாம்பு பிடிபட்டது
ஆரல்வாய்மொழி ஆலடிநகர் பகுதியில் உள்ள பொய்கை அணை நீர் கால்வாயில் நேற்று இரவு பெரிய மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை அந்த பகுதி மக்கள் பார்த்தனர். உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் அந்த பாம்பு அருகில் இருந்த செடிகளுக்குள் புகுந்துவிட்டது. அங்கு வந்த வனத்துறை வேட்டைத்தடுப்பு காவலர்கள் சிராஜ், தனுஷ் ஆகியோர் கால்வாய்க்குள் இறங்கி செடிகளுக்கு இடையே பதுங்கியிருந்த மலைபாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.