< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
குரங்கை விழுங்க முயன்ற மலைப்பாம்பு
|27 Oct 2023 1:55 AM IST
குரங்கை விழுங்க முயன்ற மலைப்பாம்பு பிடிபட்டது.
மணப்பாறை:
துவரங்குறிச்சியை அடுத்த மல்லிகைப்பட்டி சமத்துவபுரம் காட்டுப்பகுதியில் ஒரு மலைப்பாம்பு குரங்கு ஒன்றை கொன்று விழுங்க முயற்சி செய்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற குரங்குகள் சத்தம் போட்டதை அடுத்து, அப்பகுதி மக்கள் அருகில் சென்று பார்த்தனர். அவர்கள் ெகாடுத்த தகவலின் பேரில் துவரங்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகர் மற்றும் சிறப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் பிடிபட்ட மலைப்பாம்பையும், இறந்த குரங்கையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.