< Back
மாநில செய்திகள்
போடியில் சாலையில் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு
தேனி
மாநில செய்திகள்

போடியில் சாலையில் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு

தினத்தந்தி
|
26 Oct 2023 3:00 AM IST

போடியில் சாலையில் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு பிடிபட்டது.

போடியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. அப்போது சாலைகளில் மழைநீர் வெள்ளமென கரைபுரண்டு ஓடியது. இந்தநிலையில் போடியில், குரங்கணி சாலையோரம் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரில் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து உடனடியாக போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சாலையில் ஊர்ந்து சென்ற 10 அடி நீள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் பாம்பை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டுபோய் விட்டனர்.

மேலும் செய்திகள்