< Back
மாநில செய்திகள்
சமூக நீதி எனும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
கரூர்
மாநில செய்திகள்

சமூக நீதி எனும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
25 Sept 2023 12:19 AM IST

சமூக நீதி எனும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

கரூர் மாவட்ட பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில் சமூக நீதி எனும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி புன்னம்சத்திரத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் பங்கேற்று கட்சி கொடியேற்றி வைத்து பட்டியலின மக்களுக்கு பா.ஜ.க. என்னென்ன நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்பது குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி 50 சதவீத பட்டியல் இன மக்கள் வசிக்கும் கிராமங்களில் ஒட்டுமொத்த வளர்ச்சியினை கொண்டு வரும் நோக்கில் பிரதம மந்திரி முன்மாதிரி கிராமத் திட்டம் செயல்படுத்தப் படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் 19 ஆயிரத்து 84 கிராமங்களில் உள்ள 43 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்துள்ளன. அதேபோல் முத்ரா கடன் திட்டத்தில் பயனடைந்துள்ள 34 கோடியே 94 லட்சம் பேரில் 5 கோடியே 92 லட்சம் பேர் பட்டியல் இன மக்கள் ஆவர்.

இது தவிர பட்டியல் இன மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, வெளிநாட்டில் உயர் கல்வி படிக்க உதவித்தொகை, தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற இலவச பயிற்சி மையம், பட்டியல் இன இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்றவும், உயர்கல்வி பயின்று தொழில் தொடங்கவும் பட்டியல் இன துணிகர தொழில் முதலீட்டு திட்டம் என்று பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்