< Back
தமிழக செய்திகள்

தமிழக செய்திகள்
விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அமைக்க கோரி முதல்-அமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்

9 July 2022 6:27 PM IST
விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு, புதிய மாவட்டம் அமைக்க கோரி தமிழக முதல்-அமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
விருத்தாசலம்:
நடந்து முடிந்த தமிழக சட்ட மன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, விருத்தாசலத்தை தலைமை இடமாகக் கொண்டு, புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று, அப்போதைய தி.மு.க. தலைவராக இருந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதனை அடிப்படையாகக் கொண்டு, கடலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு, புதிய மாவட்டம் உருவாக்கக் கோரி, விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில் உள்ள துணை அஞ்சலக அலுவலகம் எதிரே பொது நல அமைப்புகள் மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கோரிக்கை அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தங்களது கோரிக்கை அஞ்சல் அட்டைகளை, மங்கலம்பேட்டை துணை அஞ்சலகத்தில் உள்ள அஞ்சல் பெட்டியின் உள்ளே போட்டனர்.