கள்ளக்குறிச்சி
விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி
|தியாகதுருகம் பகுதியில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி
தியாகதுருகம்
வேளாண் உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி தியாகதுருகம் அருகே உள்ள கூத்தக்குடி மற்றும் காச்சக்குடி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்றது. இதற்கு தியாகதுருகம், ஒன்றியக்குழு தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் நெடுஞ்செழியன், ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, வேளாண்மை அலுவலர் வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு வரவேற்றார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 300 விவசாயிகளுக்கு தலா 2 வீதம் 600 தென்னங்கன்றுகளை வழங்கினார். இதில் முடியனூர் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பு இளங்கோவன், வேளாக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் ராணி எத்திராஜ், கூத்தக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா நாராயணசாமி, ஒன்றிய கவுன்சிலர் தேவி பழனிவேல், துணை வேளாண்மை அலுவலர் சிவநேசன் மற்றும் கூத்தக்குடி, காச்சக்குடி கிராமங்களை சேர்ந்த பயனாளிகள் கலந்துகொண்டனர். முடிவில் காச்சக்குடி ஊராட்சி மன்ற தலைவர் மீனா தணிகாசலம் நன்றி கூறினார்.