தஞ்சாவூர்
விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
|ஆடுதுறையில் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
திருவிடைமருதூர்:
ஆடுதுறையில் உள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் கொச்சின் முந்திரி - கொக்கோ மேம்பாட்டு இயக்குனரக நிதி உதவியின் கீழ் முந்திரி விவசாயிகளுக்கான நவீன சாகுபடி குறித்த பயிற்சி மற்றும் காவிரி டெல்டா, கீழ்கொள்ளிடம்- மருதையாறு உபநீர் வடிகால் பகுதி கிராம விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி தலைமை தாங்கினார். இதில் விருதாச்சலம் மண்டல ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் சுந்தரையா, பழனிகுமார், ஜெயபிரபாவதி, நிலைய இயக்குனர் சுப்ரமணியன் ஆகியோர் பயிற்சி குறித்து பேசினர். இதில் தோட்டக்கலை உதவி இயக்குனர் நீதிமாணிக்கம், தோட்டக்கலை உதவியாளர் அனுசுயா உள்ளிட்ட தோட்டக்கலை துணை இயக்குனர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். ஈச்சங்கோட்டை வேளாண்மை கல்லூரி-ஆராய்ச்சி நிலைய முதல்வர் வேலாயுதம் பேசினார். முடிவில் ஆனந்த கிருஷ்ணவேணி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் நூற்றூக்கும் மேற்பட்ட முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். முன்னதாக ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பேரூராட்சி சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையை பேரூராட்சி தலைவர் ம. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து புதியசாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நட்டு அங்குள்ள குளத்தில் மீன் குஞ்சுகள் விடப்பட்டது.