< Back
மாநில செய்திகள்
கீழதிருப்பாலக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.25 ஆயிரம் பரிசு
திருவாரூர்
மாநில செய்திகள்

கீழதிருப்பாலக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.25 ஆயிரம் பரிசு

தினத்தந்தி
|
9 May 2023 12:15 AM IST

கீழதிருப்பாலக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.25 ஆயிரம் பரிசு

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் நினைவாக ஆண்டு தோறும் சிறந்த பள்ளிக்கான பரிசு தொகை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. 2022- 23-ம் கல்வியாண்டில் திருவாரூர் மாவட்டத்தில் சிறந்த தொடக்கப்பள்ளிக்கான பரிசுத்தொகை மன்னார்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கீழ திருப்பாலக்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பரிசு தொகைக்கான காசோலையை வட்டார கல்வி அலுவலர்கள் இன்பவேணி, முத்தமிழன் ஆகியோர் கீழதிருப்பாலக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சித்ராவிடம் வழங்கினர். நிகழ்ச்சியில் உதவி ஆசிரியர்கள் அகல்யா, கலையரசி, செந்தாமரை, பள்ளி மேலாண்மை குழு தலைவி தீபாராஜ்மோகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்