< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பழனியில் விடுமுறை நாளில் செயல்பட்ட தனியார் பள்ளி - கோட்டாட்சியர் அதிரடி நடவடிக்கை
|7 Aug 2022 3:36 PM IST
பழனி அருகே விடுமுறை நாளில் செயல்பட்ட பள்ளியில் பழனி கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டு எச்சரிக்கை விடுத்தார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சண்முகநதியில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் 11,12-ம் வகுப்பு மாணவர்கள் இன்று சிறப்பு வகுப்பை பள்ளி நிர்வாகம் நடத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பழனி கோட்டாட்சியர் சிவக்குமார் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வகுப்பு நடத்தி வந்துள்ளனர். பின்னர், பழனி கோட்டாட்சியர் சிவக்குமார் பள்ளி நிர்வாகத்தை எச்சரித்து மாணவ-மாணவிகளை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த மாணவர்கள் உற்சாகமாக வீட்டிற்கு சென்றனர்.