< Back
மாநில செய்திகள்
சின்னசேலம் அருகே தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து
மாநில செய்திகள்

சின்னசேலம் அருகே தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து

தினத்தந்தி
|
7 Dec 2023 8:30 PM IST

ஓட்டுநர் அதிவேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மூங்கில் பாடி செல்லும் சாலையில் தனியார் பள்ளி பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 குழந்தைகள் காயமடைந்தனர். அவர்கள் சின்சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக குழந்தைகளின் பெற்றோர் தெரிவித்தனர். ஓட்டுநர் அதிவேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர், தப்பியோடினார். விபத்து நடந்த இடத்தில் வட்டாட்சியர் நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்