< Back
மாநில செய்திகள்
இரவில் திடீரென ஒலித்த தனியார் நிதி நிறுவன அலாரம்
திருச்சி
மாநில செய்திகள்

இரவில் திடீரென ஒலித்த தனியார் நிதி நிறுவன அலாரம்

தினத்தந்தி
|
19 May 2023 2:09 AM IST

இரவில் திடீரென ஒலித்த தனியார் நிதி நிறுவன அலாரத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

துவரங்குறிச்சி:

துவரங்குறிச்சி கடைவீதி பகுதியில் ஒரு தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த எச்சரிக்கை அலாரம் நேற்று முன்தினம் இரவு திடீரென ஒலித்தது. இதுகுறித்து பொதுமக்கள் துவரங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து பார்வையிட்டனர்.

ேமலும் நிதி நிறுவன ஊழியரை செல்போனில் தொடர்பு கொள்ள முடியாததால், கட்டிட உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய ஆய்வில் நிதி நிறுவனத்தில் எந்த ஒரு அசம்பாவிதமும் நிகழவில்லை என்பது தெரியவந்தது. ஆனால் அலாரம் எதனால் ஒலிக்கிறது என்பதை கண்டறிய முடியவில்லை. இதனையடுத்து போலீசார் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் நேற்று காலை நிதி நிறுவன ஊழியர்கள் வந்த பின்னர் அலாரம் ஒலிப்பதை நிறுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்