< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
விழுப்புரத்தில் லாரி மோதி தனியார் நிதி நிறுவன மேலாளர் பலி
|4 Sept 2023 12:15 AM IST
விழுப்புரத்தில் லாரி மோதி தனியார் நிதி நிறுவன மேலாளர் உயாிழந்தாா்.
விழுப்புரம் அருகே உள்ள மரகதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிபாலன் மகன் சிவபாலன் (வயது 37). இவர் செஞ்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று சிவபாலன் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் இருந்து திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி ஒன்று சிவபாலன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிவபாலன், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.