< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
தனியார் நிறுவன ஊழியரை கத்திமுனையில் மிரட்டி செல்போன் பறிப்பு
|23 March 2023 3:59 PM IST
தனியார் நிறுவன ஊழியரை கத்திமுனையில் மிரட்டி செல்போனை பறித்து சென்ற கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட கூடலூர் ஹவுசிங் போர்டு குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 29), தனியார் நிறுவன ஊழியர். இந்த நிலையில் சம்பவத்தன்று பணி முடிந்து வீட்டுக்கு ஏரிக்கரை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பார்த்தசாரதியை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து பார்த்தசாரதி மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.