< Back
மாநில செய்திகள்
நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

தினத்தந்தி
|
15 Jun 2022 1:02 PM IST

நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

திருவள்ளூரை அடுத்த காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42). தனியார் நிறுவன ஊழியர்.

நேற்று முன்தினம் சுரேஷ் வேலையின் காரணமாக மோட்டார் சைக்கிளில் திருவள்ளூருக்கு வந்தார். பின்னர் அவர் வேலையை முடித்துவிட்டு தன்னுடைய வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவர் புட்லூர் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையின் ஓரம் எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பதிவு எண் இல்லாத லாரியின் பின்னால் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.


இதில் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த சுரேசை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவ்வாறு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்