< Back
மாநில செய்திகள்
சுவர் இடிந்து விழுந்து தனியார் நிறுவன ஊழியர் சாவு: வேடிக்கை பார்க்க வந்தவருக்கு நேர்ந்த சோகம்
சென்னை
மாநில செய்திகள்

சுவர் இடிந்து விழுந்து தனியார் நிறுவன ஊழியர் சாவு: வேடிக்கை பார்க்க வந்தவருக்கு நேர்ந்த சோகம்

தினத்தந்தி
|
9 July 2022 10:18 AM IST

சுவர் இடிந்து விழுந்ததில் வேடிக்கை பார்க்க வந்த தனியார் நிறுவன ஊழியர் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை சூளைமேடு வீரபாண்டியன் நகர் 1-வது தெருவில் நேற்று முன்தினம் பழைய வீடு ஒன்றை பொக்லைன் எந்திரத்தால் இடித்து கொண்டிருந்தனர். அப்போது அதை வேடிக்கைப் பார்ப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஹரிபாபு (வயது 43) என்பவர் வந்தார். அவர், வீட்டுக்குள் தூசி, சத்தம் அதிகமாக வருவது தொடர்பாக பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அவர் பேசிக்கொண்டிருந்த வீட்டின் ஒரு பகுதி சுவர் திடீரென அதிர்வில் உடைந்து ஹரிபாபு மேல் விழுந்தது. இதில் விழுந்த சுவர்களின் இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் ஹரிபாபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பொக்லைன் டிரைவர் திருவேற்காட்டை சேர்ந்த மகிழன் (வயது 22) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்