< Back
மாநில செய்திகள்
களியக்காவிளை அருகே பூட்டிய வீட்டில் பிணமாக கிடந்த மதபோதகர்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

களியக்காவிளை அருகே பூட்டிய வீட்டில் பிணமாக கிடந்த மதபோதகர்

தினத்தந்தி
|
11 May 2023 3:00 AM IST

களியக்காவிளை அருகே பூட்டிய வீட்டில் மதபோதகர்பிணமாக கிடந்தார்.

களியக்காவிளை:

களியக்காவிளை அருகே உள்ள அடைக்காகுழி பகுதியைச் சேர்ந்தவர் ஆஸ்டின் ஜெனிஷ் (வயது 62), பெந்தேகொஸ்தே மத போதகர். திருமணமாகாத இவர் மனநிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் வீட்டில் இருந்தபடி சிகிச்சைக்கு சென்று வந்தார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மதபோதகர் வீடு பூட்டப்பட்டிருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக சென்று பார்த்த போது போதகர் இறந்த நிலையில் வீட்டில் கிடந்தார். பின்னர் போலீசார் விரைந்து வந்து போதகர் ஆஸ்டின் ஜெனிஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆஸ்டின் ஜெனிஷ் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்