தஞ்சாவூர்
விலை நிர்ணயக்குழுவை அமைக்க வேண்டும்
|விலை நிர்ணயக்குழுவை அமைக்க வேண்டும்
கும்பகோணம்
கட்டுமான பொருட்களின் விலை உயர்ைவ கட்டுப்படுத்த விலை நிர்ணயக்குழுவை அமைக்க வேண்டும் என கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார் கூறினார்.
பொதுக்குழு கூட்டம்
கும்பகோணத்தில் கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்க மற்றும் தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர் கட்சி சார்பில் தஞ்சை வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்க மாவட்ட தலைவர் சதாசிவம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் சிவகுமார், முருகன், மாவட்ட மகளிர் அணித்தலைவர் பாக்கியலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஆனந்தன் வரவேற்றார். கூட்டத்தில் தமிழக அரசின் கட்டுமான தொழிலாளர் வாரிய தலைவர் பொன் குமார், இணை பொது செயலாளர்கள் குமார், ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் மாவட்ட பொருளாளர் ராஜசேகர் நன்றி கூறினார்.
பேட்டி
பின்னர் தமிழக அரசின் கட்டுமான தொழிலாளர் வாரிய தலைவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வீடு இல்லாத தொழிலாளர்களுக்கு சொந்த வீடு கட்டுவதற்காக ரூ.4 லட்சம் வழங்குவதாக அறிவித்ததுக்கும், தமிழகத்தில் உள்ள 5 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.400 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதுக்கும் தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
விலை நிர்ணயக்குழு
கட்டுமானப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் எந்த விதமான முகாந்திரம் இல்லாமல் உயர்த்தி இருக்கின்றனர். இந்த விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக நிரந்தரமாக செயல்படக்கூடிய வகையில் விலை நிர்ணயக்குழுவை அமைக்க வேண்டும். ராகுல்காந்தி நடைபயணம் மத்திய அரசுக்கு கடிவாளமாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.