< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி அருகே, கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை
|19 Jan 2024 2:57 PM IST
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், ஆரோக்கிய ஷர்மிளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அருகே, கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகரகோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த வெற்றிச்செல்வன் என்பவருக்கும், ஆரோக்கிய ஷர்மிளா என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
ஆரோக்கிய ஷர்மிளா 8 மாத கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தாய் வீடான ராயபுரம் கிராமத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், ஆரோக்கிய ஷர்மிளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை செய்து வருகிறார்.