< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
லாரி மோதி முறிந்து விழுந்த மின் கம்பம்
|16 July 2023 12:19 AM IST
லாரி மோதி முறிந்து விழுந்த மின் கம்பம்
ராஜபாளையம்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு பெரம்பலூரில் இருந்து முருகன் என்பவர் இப்பகுதியில் இயங்கி வரும் தனியார் நூற்பாலைக்கு பஞ்சு ஏற்றி வந்துள்ளார். ராஜபாளையம் அருகே அழகை நகர் பகுதி வழியாக செல்லும்போது மின் வயர்கள் மற்றும் மின் கம்பம் மீது லாரி மோதியது.
இதில் மின்கம்பம் ஒடிந்து வாகனத்தின் மேல் தொங்கியது. இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். மேலும் மின் கம்பத்தினை அகற்றி சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.