< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
வீட்டின் மீது விழுந்த மின்கம்பம்
|22 Aug 2022 1:25 AM IST
வீட்டின் மீது மின்கம்பம் விழுந்தது.
துறையூர்:
துறையூர் அருகே உள்ள கெம்பியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிச்சையின் மகன் குமார்(வயது 31). இவரும், இவரது மனைவி அன்னலட்சுமியும் நேற்று மாலை அவர்களுக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் இருந்தனர். இரவில் வீசிய பலத்த காற்றின் காரணமாக, குமார் வீட்டின் அருகே இருந்த மின்கம்பம் சாய்ந்து வீட்டு கூரை மீது விழுந்தது. இதில் ஓடுகள் நொறுங்கி சேதமடைந்தன. வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்நிலையில், சேதமடைந்த அந்த மின்கம்பத்தை மாற்றக்கோரி அந்தப் பகுதியினர் பலமுறை வலியுறுத்தியும், மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.