< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
மலைக்கிராமத்தில் தபால் அலுவலகம்
|17 Oct 2023 4:45 AM IST
நத்தம் அருகே உள்ள குட்டுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மலைக்கிராமமான பெரியமலையூரில், புதிய தபால் அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
நத்தம் அருகே உள்ள குட்டுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மலைக்கிராமமான பெரியமலையூரில், புதிய தபால் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. இதற்கு திண்டுக்கல் தபால் கோட்ட கண்காணிப்பாளர் நாகநாயக் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் அழகம்மாள் மணி, உபகோட்ட ஆய்வாளர் அபியாபப்பு ராஜீவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் நத்தம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி புதிய தபால் அலுவலகத்தை திறந்து வைத்தார். விழாவில் தபால் அலுவலக ஊழியர்கள், வனத்துறையினர், கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.