< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
உதகை-குன்னூர் மலைப்பாதையில் சாலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
|14 Dec 2022 6:01 PM IST
மலைப்பாதையில் சாலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் இரவில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக மலைப்பாதையின் ஒரு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது.
இதனால் உதகை-குன்னூர் மலைப்பாதையில் சாலையின் ஒரு பகுதி அப்படியே சரிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு வளையங்கள் வைக்கப்பட்டு வாகனங்கள் மெதுவாக செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.