< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
ஆவடி அருகே ரெயிலில் அடிபட்டு போலீஸ்காரர் பலி
|29 Dec 2022 9:57 PM IST
ஆவடி அருகே ரெயிலில் அடிபட்டு போலீஸ்காரர் பலியானார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வீராசாமி (வயது 38). ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சி.ஆர்.பி.எப்.) போலீஸ்காரரான இவர், அங்குள்ள கேண்டீனில் சமையலராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர், இந்து கல்லூரி-ஆவடி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆவடி ரெயில்வே போலீசார், பலியான வீராசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.