< Back
மாநில செய்திகள்
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசில் புகார்
வேலூர்
மாநில செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசில் புகார்

தினத்தந்தி
|
2 July 2023 10:00 PM IST

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.

காட்பாடி சேனூர் இந்திரா நகரை சேர்ந்தவர் புத்தபிரியன் (வயது 26). இவரும் 17 வயது சிறுமி ஒருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அப்போது அவர்கள் நெருங்கி பழகி உள்ளனர். இதில் சிறுமி கர்ப்பமாக தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இது குறித்து சிறுமியின் தாய் காட்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராணி, புத்தபிரியன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

மேலும் செய்திகள்