< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தோல்வி அடைந்துவிடுவோம் என நினைத்து உயிரை மாய்த்துக் கொண்ட பிளஸ் 2 மாணவர்..!
|8 May 2023 12:03 PM IST
பொதுத்தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் திருவண்ணாமலையில் பிளஸ்டூ மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை,
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி தொடங்கி அன்று ஏப்ரல் 3-ஆம் தேதி முடிவடைந்தது. இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 94.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை அருகே பொதுத்தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் பிளஸ் 2 மாணவர் உயிரை மாய்த்துக் கொண்டார். பிளஸ் 2 மாணவர் ஹரி என்பவர் வீட்டின் இரண்டாவது மாடியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவனின் உடலை கைப்பற்றி தானிப்பாடி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மாணவர்கள் மனநல ஆலோசனை பெற 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ள தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.