< Back
மாநில செய்திகள்
கரி துகள் வெளியேறுவதை கட்டுப்படுத்தக்கோரி கடையடைப்பு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கரி துகள் வெளியேறுவதை கட்டுப்படுத்தக்கோரி கடையடைப்பு

தினத்தந்தி
|
6 Feb 2023 12:15 AM IST

மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலையில் கரி துகள் வெளியேறுவதை கட்டுப்படுத்தக்கோரி கடையடைப்பு அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டத்தில் முடிவு

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அனைத்து வியாபாரிகள் சங்க செயற்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் கனகராஜ் முன்னிலை வகித்தார். பொருளாளர் கோகுல்ராம் வரவேற்றார். கூட்டத்தில் மூங்கில்துறைப்பட்டு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கரிதுகள்களை ஆலை நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என்று பலமுறை கோரிக்கை மனு வழங்கியும், போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கரி துகள் வெளியேறுவதை கட்டுப்படுத்த ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வருகிற 27-ந் தேதி அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் கடை அடைப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்