திண்டுக்கல்
தாழ்வாக பறந்தபடி வானில் வட்டமடித்த விமானம்
|பழனி பகுதியில் நேற்று மதியம் விமானம் ஒன்று தாழ்வாக பறந்தபடி வந்தது.
கோவை மாவட்டம் சூலூர் விமான பயிற்சி பள்ளியில் இருந்து பயிற்சி விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அவ்வப்போது பழனி மற்றும் அதன் சுற்று பகுதிகளில் பறந்து செல்வது வழக்கம். அப்போது அவை தாழ்வாகவே பறந்து செல்கின்றன. அதன்படி நேற்று மதியம் சுமார் 12 மணி அளவில், பழனி பகுதியில் விமானம் ஒன்று தாழ்வாக பறந்தபடி வந்தது. பின்னர் அது 3 முறை வானில் வட்டமடித்துவிட்டு சென்றது. இதற்கிடையே விமானம் தாழ்வாக பறந்தபோது அதிக சத்தம் எழுந்ததால் பொதுமக்கள் என்னமோ, ஏதோ என்று பதறியடித்தபடி வெளியே வந்து பார்த்தனர். அதன்பிறகே அது விமானம் என்று தெரிந்தது. அதையடுத்து பொதுமக்கள் தங்கள் செல்போனில் அதை புகைப்படம் எடுத்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, சூலூர் தளத்தில் இருந்து பயிற்சிக்கு வந்த ராணுவ விமானமாக இருக்கலாம் என்றனர். பழனியில் தாழ்வாக விமானம் பறந்து வட்டமடித்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.