< Back
மாநில செய்திகள்
அரசு மருத்துவமனை அருகே கிடந்த பட்டாக்கத்தி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

அரசு மருத்துவமனை அருகே கிடந்த பட்டாக்கத்தி

தினத்தந்தி
|
8 July 2022 12:58 AM IST

அரசு மருத்துவமனை அருகே கிடந்த பட்டாக்கத்தி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நுழைவு வாயில் அருகே நேற்று காலை பச்சை, வெள்ளை நிற கட்டம் போட்ட சட்டையில் சுற்றி மறைத்து போடப்பட்டிருந்த பட்டாக்கத்தி ஒன்று கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொளஞ்சியப்பன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பட்டாக்கத்தியை கைப்பற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். பட்டாக்கத்தியின் எடை சுமார் 1 கிலோ இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். மருத்துவமனை அருகே பட்டாக்கத்தி போட்டு சென்றது யார்?, யாரையாவது கொலை செய்ய பயன்படுத்துவதற்காக போட்டு செல்லப்பட்டதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்